கொரோனா சீனாவின் 'பயோ வெப்பன்:' 20 டிரில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி வழக்கு

வாஷிங்டன்: 'கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 டிரில்லியன் டாலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும்' எனக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சீனாவின் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. அங்கு, சீனாவின் மிகப் பெரிய 'வைரலாஜி' ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கும் என, உலக நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.


இதையடுத்து, 'அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், வூஹானில் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்தனர்' என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனாவை 'சீன வைரைஸ்' எனக் குறிப்பிட்டார்.அதன்பின், இரு நாடுகளும் மாறி மாறி, தங்களது நாட்டில் பணியாற்றும் எதிரி நாட்டின் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றின.