இத்தாலியின் வடக்கு பகுதியில் மட்டும் 3000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில், நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு டெல்லி தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி, "காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலிக்குப் போய்விட்டு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அதை அவர்தான் சொல்ல வேண்டும்," என்று கூறினார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை அமெரிக்காவில் 11 பேர் உயிழந்துள்ள நிலையில், தனது மாகாணத்தில் முதல் மரணம் பதிவாகியுள்ள சூழலில், கலிஃபோர்னியா மாகாண அரசு அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.