டெல்லி: மகாராஷ்டிராவில் அரசியல் களம் உச்ச கட்ட பரபரப்பை அடைந்துள்ளது. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறிக் கொண்டே இருக்கிறது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின. 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபையில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களையாவது பெற்றுள்ள கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும்.
பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தனிப்பெரும் கட்சி என்பதால், பாஜகவை, ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அழைப்பு விடுத்தார். ஆனால், தங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று அந்த கட்சி மறுப்பு தெரிவித்துவிட்டது. இதையடுத்து அதற்கு அடுத்த பெரிய கட்சியான சிவ சேனாவை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சிவசேனா கோரியுள்ளது. சிவசேனாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா, அல்லது மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா? என்பது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், இவை தொடர்பான உடனுக்குடனான தகவல்களை தெரிந்துகொள்ள, இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருக்கவும்.
Read more at: https://tamil.oneindia.com/news/india/maharashtra-government-formation-live-updates-368133.html