மகாராஷ்டிராவில் யார் ஆட்சி? அத்தனை பார்வையும் இவரை நோக்கி.. கிங் மேக்கரான சோனியா காந்தி!

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக, காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்குப் பிறகுதான் தேசியவாத காங்கிரசும் அது தொடர்பாக முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தேசியவாத காங்கிரசின் மையக்குழு கூட்டம் மும்பையில் இன்று சரத் பவார் தலைமையில் நடைபெற்றது. அதில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு தரவில்லை. எனவே தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆளுநர் இன்று இரவு அழைப்புவிடுத்து, 24 மணி நேர கெடு கொடுத்துள்ளார்.


எனவே சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனாவுடன் இணைந்து, ஆட்சியமைக்க சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.