மகாராஷ்டிரா: சிவசேனா குறித்து மவுனம் - என்சிபியுடன் ஆலோசனை நடத்துவதாக மட்டும் காங். அறிவிப்பு

சிவசேனாவுக்கு ஆதரவு ? காங்கிரஸ் தீவிர ஆலோசனை டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.


அதேநேரத்தில் மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸுடன் (என்சிபி) மேலும் ஆலோசனைகள் நடத்த இருப்பதாக மட்டும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 105 இடங்களைப் பெற்ற பாஜகவை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். ஆனால் பாஜக தலைவர்களோ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் ஆட்சி அமைக்க முடியாது என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டனர்.